"கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்" - மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் கடிதம்

எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு கூட்டம் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
x
எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு கூட்டம் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், நோய்தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில் எத்தகைய மனநிறைவுக்கும் இடமளித்து விடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர், எதிர் வரும் பண்டிகைகளை கருத்தில் கொண்டு கூட்டம் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்ற செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.கொரோனா மேலாண்மை தொடர்பான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறும் அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவதில் ஏதேனும் சுணக்கம் காணப்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்