கேரள எம்.எல்.ஏ.களுக்கு எதிரான வழக்கு : பதவியை பயன்படுத்தி தப்பிக்க முடியாது - உச்சநீதிமன்றம் கண்டனம்

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட கேரள எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், கண்டனத்தை பதிவு செய்தது.
கேரள எம்.எல்.ஏ.களுக்கு எதிரான வழக்கு : பதவியை பயன்படுத்தி தப்பிக்க முடியாது - உச்சநீதிமன்றம் கண்டனம்
x
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட கேரள எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், கண்டனத்தை பதிவு செய்தது. கடந்த 2015ம் ஆண்டு கேரளா சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியாக இருந்த மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர். இதனால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை இன்று வந்தது. அப்பொழுது, சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ பொதுச்சொத்துக்களை உறுப்பினர்கள் சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என்ற நீதிபதிகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்பி-க்கள்  தங்களது பதவியை பயன்படுத்தி கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிக்க முயற்சிக்க கூடாது என கண்டித்தனர். Next Story

மேலும் செய்திகள்