கொட்டித்தீர்த்த கனமழை - ஆறுகளில் வெள்ளம்.. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
கொட்டித்தீர்த்த கனமழை - ஆறுகளில் வெள்ளம்.. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
கொட்டித்தீர்த்த கனமழை - ஆறுகளில் வெள்ளம்.. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
மகாராஷ்டிர மாநிலம் வால்வா எனும் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. குறிப்பாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டதால், கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில் வால்வா எனும் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.
Next Story