ஆபாசப் பட தயாரித்து வெளியிட்ட விவகாரம்... ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் ரகசிய அலமாரி

ஆபாசப் பட தயாரித்து வெளியிட்ட விவகாரம்... ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் ரகசிய அலமாரி
ஆபாசப் பட தயாரித்து வெளியிட்ட விவகாரம்... ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் ரகசிய அலமாரி
x
ஆபாசப் பட தயாரித்து வெளியிட்ட விவகாரம்... ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் ரகசிய அலமாரி

ஆபாசப் படம் தயாரித்து விற்ற விவகாரத்தில், நடிகை கெஹனா வசிஸ்த் உள்பட மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா, ஆபாசப் படம் தயாரித்து வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த கைதுகளும் தொடர்ந்தன. இதனிடையே, நடிகை கெஹனா வசிஸ்த் உள்பட மேலும் 3 பேருக்கு, ஆபாசப் பட தயாரிப்பு விவாகரத்தில், தொடர்புள்ளதாக கூறும் குற்றப்பிரிவு போலீசார், ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் செய்த சோதனையின் போது, ரகசிய அலமாரியை கண்டு பிடித்ததாகவும், அதன் மூலம், தொடர்புள்ளதாக  சந்தேகம்  உள்ளது என்றும் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, நடிகை கெஹனா வசிஸ்த் உள்ளிட்ட மூவருக்கு, குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.    

Next Story

மேலும் செய்திகள்