ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை- நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்ததாக நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.
ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை- நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது
x
ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்ததாக நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா தவிர்த்து சமூக பணிகளால் அறியப்படும் நடிகைகளில் ஒருவர் சில்பா ஷெட்டி.. சுற்றுசூழல், விலங்குகள் பாதுகாப்பு குறித்து பிரசாரம் மேற்கொள்ளும் அவர், மக்கள் நலத்திற்கான உணவுபழக்கம், யோகா பயிற்சிகளையும் வழங்கிவருகிறார்.மறுபுறமோ அவருடைய கணவர் ராஜ்குந்த்ரா சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக இருக்கிறார். ஐபிஎல் சூதாட்டம், பணமோசடி, தங்க மோசடியென அவருக்கு எதிராக நீளும் புகார்களில் இப்போது ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.செல்போன் செயலிகளில் ஆபாச படங்கள் வெளியாவதை கண்காணித்து வந்த மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.விசாரணையில் ஆபாச படங்களில் காணப்பட்டவர்கள், படங்களை எடுத்தவர்கள் வரிசையாக போலீசாரிடம் சிக்கினர். இதில் ராஜ்குந்த்ராவின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய உமேஷ் காந்தும் அடங்குவார். அவரிடம் போலீசார் தங்களுடைய பாணியில் விசாரித்தபோது, அந்த கும்பல் எப்படி செயல்பட்டது, ராஜ்குந்த்ராவின் பங்கு என்ன என்பது தெரியவந்ததும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  
தயாரிப்பு நிறுவனம் சார்பில் மும்பை பங்களாவில் ஆபாச படம் எடுக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் தன்வீர் ஹாஸ்மி, தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை வெப் தொடரில் நடிக்கவைப்பதாக கூறி ஆபாச படத்தில் நடிக்க வைத்துள்ளார்.பின்னர், ராஜ் குந்த்ரா தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும், உமேஷ் காந்த், இந்திய சட்டங்களில் இருந்து தப்பிக்க வீடியோக்களை  WeTransfer செயலி மூலம் லண்டனை சேர்ந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். அங்கிருந்து பிற செயலிகளில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஒரு வீடியோ 3 லட்சம் ரூபாய் வரையில் விற்கப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ராஜ்குந்த்ராவுக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்