முதுகலை பல் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு;"4 வாரங்களில் கலந்தாய்வு நடத்தப்படும்" - மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, 4 வாரங்களுக்குள் காணொலி வாயிலாக நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.
முதுகலை பல் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு;4 வாரங்களில் கலந்தாய்வு நடத்தப்படும் - மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
x
முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, 4 வாரங்களுக்குள் காணொலி வாயிலாக நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.முதுகலை பல் மருத்துவப் படிப்பான எம்.டி.எஸ்-க்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி நீட் தேர்வு நடந்தது. முடிவுகள் அதே மாதம் வெளியான நிலையில், கலந்தாய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை எதிர்த்தும், கலந்தாய்வு தேதியை அறிவிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், கலந்தாய்வு தேதியை ஒரு வாரத்துக்குள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், நீட் மதிப்பெண் மற்றும் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் 4 வாரங்களுக்குள் காணொலி வாயிலாக, எம்.டி.எஸ். கலந்தாய்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்