90 நிமிடங்களில் கொரோனா முடிவுகள் - பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முகக்கவசம்

கொரோனாவை வெறும் 90 நிமிடங்களில் கண்டறியும் வகையில் அதிநவீன முகக்கவசம் ஒன்றை ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
90 நிமிடங்களில் கொரோனா முடிவுகள் - பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முகக்கவசம்
x
கொரோனா தொற்றை, ஆர்டிபிசிஆர் கருவி, சிடி ஸ்கேன் உள்ளிட்ட முறைகளில் கண்டறிந்து வரும் நிலையில், அதை மேலும்  எளிதாக்கும் விதமாக, பிரத்யேகமாக மாஸ்க் ஒன்று ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.முகக்கவசத்தின் உள் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் அதை அணிந்திருப்பவரின் சுவாசத்தை கண்காணிக்கின்றது.அதன் பின்னர் முகக்கவசத்தில் உள்ள பட்டனை அழுத்தினால், அதை அணிந்திருப்பவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை வெறும் 90 நிமிடங்களில் கண்டறிந்து விட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், இந்த சென்சாரை முகக்கவசத்தில் மட்டுமல்லாது, மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அணியும் மேல் உடுப்பிலும் பொருத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை முகக்கவசம், குறைந்த செலவில் கொரோனாவை மிகவேகமாகவும், துல்லியமாகவும் கொரோனா தொற்றைக் கண்டறியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்