கேரளத்தில் 2 நாள் முழு ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்

கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
கேரளத்தில் 2 நாள் முழு ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்
x
கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கேரளத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியிருந்தாலும் அங்கு நேற்றும் இன்றும் இரண்டு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவை இன்றி, பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உணவை நேரடியாக சென்று விநியோகிக்கும் பணி மட்டுமே நடைபெறுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் கேரளாவில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கேரளத்தில் முழு ஊரடங்கு - 2 ஆயிரம் பேர் கைது

கேரளாவில் நேற்றும் இன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ஊரடங்கை மீறியதாக 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மருத்துவ தேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அவசியமின்றி வெளியே வந்தவர்களின் 3 ஆயிரத்து 645 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முகக்கவசம் அணியாத 10 ஆயிரத்து 943 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக 5 ஆயிரத்து 346 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் நடவடிக்கை தொடருமென போலீசார் தெரிவித்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்