கொரோனா குறைவது, நீங்கியதாக ஆகாது - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

நோய் தொற்று குறைந்து வருவதால், நீங்கி விட்டதாக எண்ணக் கூடாது என டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
கொரோனா குறைவது, நீங்கியதாக ஆகாது - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
x
நோய் தொற்று குறைந்து வருவதால், நீங்கி விட்டதாக எண்ணக் கூடாது என டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். நாட்டின் கொரோனா சூழல் மற்றும் தடுப்பூசியின்  நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறையினர் செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது பேசிய மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கடந்த 5 வாரங்களாக நோய்த் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார். 24 மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை சராசரியாக ஆயிரத்துக்கும் கீழ் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். சுகாதாரப் பணியாளர்கள் குறித்த நேரத்தில் 2ஆம் தவணை தடுப்பூசியை எடுக்க வேண்டும் என மாநில சுகாதாரத் துறை செயலர்களை கேட்டுக்கொண்டுள்ளதாக டாக்டர் வி.கே. பால் குறிப்பிட்டார். நோய் எதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்யும் செரோ சர்வே, இம்மாத இறுதிக்குள் துவங்கும் என்ற அவர், தொற்று குறைவதால், நீங்கிவிட்டது என அர்த்தமல்ல என்றும், கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்