கேரள இயக்குநர் மீது தேசத்துரோக வழக்கு - நேரில் வந்து விளக்கம் அளிக்க நோட்டீஸ்

லட்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கேரள திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் நேரில் வந்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கேரள இயக்குநர் மீது தேசத்துரோக வழக்கு - நேரில் வந்து விளக்கம் அளிக்க நோட்டீஸ்
x
லட்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய  வகையில் கருத்து தெரிவித்த கேரள திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் நேரில் வந்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. லட்சத்தீவை பூர்வீகமாகக் கொண்ட கேரள திரைப்பட உதவி இயக்குநர்  ஆயிஷா சுல்தானா, கடந்த 7 தேதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாஜக அளித்த புகாரின் பேரில் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே அவர் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் ஜாமீனில் வெளி வர முடியாத வழக்குகள் என்பதால் அவர் கைதாகவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்