ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவர் - மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் தேர்வு

ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவர் - மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் தேர்வு
x
ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் தலைவர் பதவிக்கு ஆண்டுக்கு ஒரு முறை வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். பிராந்தியங்களின் அடிப்படையில் சுழற்சி முறையில், பதவி வழங்கப்படும் நிலையில், ஆசியா - பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித்தும், ஆப்கானிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சல்மாய் ரசோலும் போட்டியிட்டனர். நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் வாக்கெடுப்பு நடந்த நிலையில், ஷாகித்துக்கு ஆதரவாக 143 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம், அவர் ஐ.நா பொதுச்சபையின் 76-வது தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில், தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்துல்லா ஷாகித்துக்கு இந்தியா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்