இந்தியாவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி - இதுவரையில் இருந்த நடைமுறை என்ன...?

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் என்ன என்பதை பார்க்கலாம்...
x
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் என்ன என்பதை பார்க்கலாம்...  

இந்தியாவில் ஜனவரியில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதும், முன்கள பணியாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கியது.

இதனையடுத்து 3-ம் கட்ட தடுப்பூசி திட்டப்படி கடந்த மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அப்போது  தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளும் கொள்முதல் செய்யும் வகையில் திட்டத்தை மத்திய அரசு பரவலாக்கியது.

தயாரிப்பாளர்களிடம் இருந்து 50 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் கொள்முதல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள், தங்களுடைய செலவில் உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசிகளை வாங்கியது. 

விலை அதிகம் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்காததால், பல மாநிலங்களில் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

எனவே மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.

இதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பிரதமர் மோடி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கும் என அறிவித்து உள்ளார்.
 
அதாவது நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த, வருகிற 21 ஆம் தேதி முதல் மத்திய அரசே மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கவிருக்கிறது.

இனி தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்யும்..

பிரதமர் மோடியின் அறிவிப்புபடி உற்பத்தியாளர்களிடம் தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத தடுப்பூசிகளை கொள்முதல் செய்யலாம், தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையுடன், சேவை கட்டணமாக அதிகபட்சமாச 150 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்