கொரோனா சிகிச்சை : புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு

மிதமான மற்றும் அறிகுறியற்ற நோய் தொற்றுள்ள நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும் ஜிங்க் உள்ளிட்ட மருந்துகளின் பயன்பாட்டை மத்திய சுகாதார அமைச்சம் கைவிட்டது.
x
மிதமான மற்றும் அறிகுறியற்ற நோய்  தொற்றுள்ள நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும் ஜிங்க் உள்ளிட்ட மருந்துகளின் பயன்பாட்டை மத்திய சுகாதார அமைச்சம் கைவிட்டது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் கொரோனா மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுகாதார சேவை இயக்குனரகம் புதிதாக வெளியிட்டது. அதில் மிதமான மற்றும் அறிகுறியற்ற நோய் தொற்று கொண்ட குழு நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் ஹைட்ராக்சி குளோரோகுயின்( ivermectin Hydroxychloroquine) மற்றும் Zinc உள்ளிட்ட மருந்துகளின் பயன்பாட்டை மத்திய சுகாதார அமைச்சகம் கைவிட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மற்றும் டோஸிலிசுமாப் மருந்துகள் மட்டுமே புதிய வழிகாட்டு நெறிமுறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறிகுறியற்ற மற்றும் லேசான நோய் தொற்று கொண்ட நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை வழங்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்தை பொறுத்தவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் மிதமான மற்றும் தீவிரமான தொற்றுள்ளவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்