மெகுல் சாக்ஸியை 10 பேர் கொண்ட கும்பல் கடத்தியது" - மெகுல் சோக்ஸி மனைவி பரபரப்பு புகார்

மத்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான மெகுல் சோக்ஸியை, ஒரு பெண் கடத்தியதாக அவரது மனைவி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
மெகுல் சாக்ஸியை 10 பேர் கொண்ட கும்பல் கடத்தியது - மெகுல் சோக்ஸி மனைவி பரபரப்பு புகார்
x
பஞ்சாப் தேசிய வங்கியில் 13,500 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சி 2018இல் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று, தென் அமெரிக்கா அருகே உள்ள ஆண்டிகுவா தீவில் குடியிரிமை பெற்று தங்கியிருந்தார்.மே 23ஆம் தேதி ஆண்டிகுவா தீவில் இருந்து சோக்சி மாயமானர். பின்னர் அருகே உள்ளா டொமினிகா தீவில் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.ஆண்டிகுவா தீவில் இருந்து அவர் கடத்தப்பட்டு டொமினாகா கொண்டு செல்லப்பட்டார் என்றும், இதற்கு ஒரு பெண் உடந்தையாக இருந்தார் என்றும் மெகுல் சோக்சியின் மனைவி ப்ரீத்தி கூறியுள்ளார்.மெகுல் சோக்சி, பஞ்சாப் தேசிய வங்கி, ஆண்டிகுனா, டொமினிகா, இந்திய உளவுத் துறை ஆண்டிகுவா தீவில் குடியுரிமை பெற்ற மெகுல் சோக்சி, அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தன் மனைவி ப்ரீத்தியுடன் தங்கியிருந்தார்.அந்த வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் 2020ஆம் ஆண்டு பார்பரா என்ற பெண் குடியேறியதாவும், அவர் தங்களுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டதாகவும் மெகுல் சோக்ஸி மனைவி கூறியுள்ளார்.
மே 23ஆம் தேதி பார்பராவை பார்க்க சென்ற போது, தனது கணவரை 10 பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்து கடத்தி சென்றதாக கீர்த்தி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய உளவு அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கடத்தல் நடந்துள்ளது என்றும் மெகுல் சோக்ஸி மனைவி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே டொமினிகா தீவிற்கு இந்திய அரசு அனுப்பியிருந்த, தனியார் நிறுவனத்தின் ஜெட் விமானம் ஒன்று அங்கிருந்து கிளம்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டொமினிகாவில் மெகுல் சோக்சி மீது வழக்கு தொடரப்பட்டு, அதன் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை முடிய காலதாமதம் ஆகும் என்பதால், வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த தனியார் ஜெட் விமானம் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.




Next Story

மேலும் செய்திகள்