கடற்படையில் 40 ஆண்டு ஓயாத பணி - விடைபெறுகிறது ஐ.என்.எஸ். சந்தயக்

கடற்படையில் 40 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்த ஐ.என்.எஸ். சந்தயக் போர் கப்பல் விடுவிக்கப்படுகிறது.
x
கடற்படையில் 40 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்த ஐ.என்.எஸ். சந்தயக் போர் கப்பல் விடுவிக்கப்படுகிறது.

இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக ஐ.என்.எஸ். சந்தயக் என்ற போர்க் கப்பல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு,  1981 ஆம் ஆண்டு முறைப்படி கடற்படையில் இணைக்கப்பட்டது.

இந்த கப்பல் தனது பணிக்காலத்தில், 200 முக்கிய ஹைட்ரோ கிராபிக் அளவீடுகளையும், நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர பகுதிகள், அந்தமான் கடல் பகுதி மற்றும் அண்டை நாடுகளில் ஏராளமான அளவீடு பணிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த 1987ம் ஆண்டு இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கு உதவும் வகையில் ஆப்பரேஷன் பவன் நடவடிக்கையிலும், 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது, மனிதாபிமான உதவி நடவடிக்கையிலும் இந்த கப்பல் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்தியா -அமெரிக்கா இடையேயான கூட்டு போர் பயிற்சி ஆகியவற்றிலும் பங்கேற்றுள்ளது.

இந்திய கடற்படையில் இருந்து நாளை இந்த போர்க்கப்பல் விடுவிக்கப்படுகிறது. இதற்கான விழா,கொரோனா நெறிமுறைகள் காரணமாக விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் எளிய முறையில் நடைப்பெறுகிறது. 

இன்று மாலை சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் இந்த போர்க்கப்பலில் உள்ள கடற்படை கொடி இறக்கப்பட்டு, கடற்படை பணியிலிருந்து விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்