பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் விளக்கம்

மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் விளக்கம்
x
பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் விளக்கம் 

மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…உலகின் மிகப்பெரிய ஜனநாயக கல்வி அமைப்பில், 33 கோடி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலமே தங்களின் பிரதான முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.மேலும், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மிகநீண்ட ஆலோசனை நடத்தப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்தாலோசனைக்கு  பிறகு, உரிய முடிவை எடுப்பது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறப்பம்சம் என குறிப்பிட்டுள்ளார்.தேர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன்  நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய கலந்துரையாடல் இது என தெரிவித்துள்ள அமைச்சர்,மாணவர்களின் உடல்நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தேர்வு ரத்து முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 
 Next Story

மேலும் செய்திகள்