உற்பத்தி திறன் 40% அதிகரித்து விட்டதா? - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

2 தடுப்பூசி நிறுவனங்களின் உற்பத்தி திறன் 40 சதவீதம் அதிகரித்து விட்டதா? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
உற்பத்தி திறன் 40% அதிகரித்து விட்டதா? - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
x
2 தடுப்பூசி நிறுவனங்களின் உற்பத்தி திறன் 40 சதவீதம் அதிகரித்து விட்டதா? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தடுப்பூசிக்காக,  பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 35000 கோடி ரூபாய் எவ்வாறு, எங்கே செலவிடப்பட்டது? எனவும் தமது பதிவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன் மாதத்தில் 12 கோடி தடுப்பூசிகள் வரும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது என்றும், ஆனால் மே மாதத்தில் 6.1 கோடி தடுப்பூசி தான் மாநிலங்களுக்கு கிடைத்துள்ளதாக பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். மே மாதத்தில் தடுப்பூசி உற்பத்தி திறன் 8.5 கோடி என மத்திய அரசு தெரிவித்த நிலையில், 7.94 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்