கொரோனா சிகிச்சைக்கு இரண்டு புதிய மருந்துகள் - மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி

கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த எலி லில்லி என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள இரண்டு மருந்துகளை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது.
x
இந்தியாவில் இயங்கி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த எலி லில்லி நிறுவனம், கொரோனா சிகிச்சைக்காக இரண்டு மருந்துகளை உருவாக்கியது ஏற்கனவே இரண்டு கட்ட பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மூன்றாம் கட்ட பரிசோதனையும் வெற்றிகரமாக முடித்தது.

இரண்டு மருந்துகள் மூலம் உயிரிழப்புகள் 87 சதவீதம் குறைந்துள்ளதாக பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகளில் இந்த இரண்டு மருந்துகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு எலி லில்லி நிறுவன மருந்துகளை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குனரகம் அங்கீகாரம் அளித்துள்ளது. மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கான சிகிச்சைக்கு இந்த மருந்துகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்