வஜ்ரா கவசம்... இது முன்களப் போராளிகளுக்கு வரப்பிரசாதம்!

மருத்துவ உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
x
மருத்துவ உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதமாக இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள, இந்த கிருமி நாசினி அமைப்பு முறையானது, முழு உடல் கவசம், என் 95 முகக் கவசங்கள், உடைகள், கையுறைகள் போன்றவற்றில் தென்படும் தொற்றின் தடயங்கள், முழுவதையும் நீக்கும்.
இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள், உடல் கவச ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த இயந்திரம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், உயிரி மருத்துவ கழிவுகளின் எண்ணிக்கையைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கும் ஏதுவாக இருக்கும் என அந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்