"1274 டேங்கர்களில் 21,392 மெ. டன் ஆக்சிஜன் மாநிலங்களுக்கு வழங்கினோம்" - இந்திய ரயில்வே

தமிழகத்திற்கு இதுவரை 34 சிறப்பு ரயில்கள் மூலம் 2 ஆயிரத்து 267 புள்ளி 82 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்திய ரயில்வே வினியோகம் செய்துள்ளது.
x
தமிழகத்திற்கு இதுவரை 34 சிறப்பு ரயில்கள் மூலம் 2 ஆயிரத்து 267 புள்ளி 82 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்திய ரயில்வே வினியோகம் செய்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், (gfx in 1 ) ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே நாளில் தமிழகத்திற்கு இரண்டு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் வந்துள்ளன. (gfx in 2 ) சட்டீஸ்கர் மாநிலம் பிலாயில் இருந்து  4 கன்டெய்னர்களில் 73 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும், (gfx in 3 ) மஹாராஷ்டிரா மாநிலம் டோல்வி ஜிண்டால் தொழிலகத்தில்  இருந்து நான்கு கன்டெய்னர்களில் 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும் சென்னைக்கு வந்தடைந்தது. (gfx in 4 ) சென்னை தண்டையார்பேட்டை ரயில்வே பெட்டக நிலையத்தில் 22 ஆக்சிஜன் ரயில்கள் கையாளப்பட்டு ஆயிரத்து 432 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தமிழகம் வந்து சேர்ந்துள்ளது. (gfx in 5 ) இந்திய ரயில்வே 313 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி அதன் மூலம் 1274 டேங்கர்களில் 21 ஆயிரத்து 392 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. (gfx in 6 ) இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 614 மெட்ரிக் டன்னும், (gfx in 7 ) உத்திர பிரதேசத்திற்கு சுமார் 3 ஆயிரத்து 797 மெட்ரிக் டன்னும், மத்திய பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன்னும், (gfx in 8 ) டெல்லிக்கு 5 ஆயிரத்து 476 மெட்ரிக் டன்னும், ஹரியானாவிற்கு இரண்டு ஆயிரத்து 23 மெட்ரிக் டன்னும், (gfx in 9) கர்நாடகாவிற்கு இரண்டாயிரத்து 115 மெட்ரிக் டன்னும் ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆயிரத்து 886  மெட்ரிக் டன்னும், (gfx in 10) ஆந்திராவிற்கு ஆயிரத்து 738  மெட்ரிக் டன்னும், கேரளாவுக்கு 380 மெட்ரிக் டன்னும், திரவ மருத்துவ ஆக்சிஜன் ரயில் மூலம் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்