ஒடிசா நோக்கி நகர்கிறது யாஸ்" புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான "யாஸ்" புயல் தற்போது கிழக்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளதையடுத்து, ஒடிசாவுக்கு மஞ்சள் நிற புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா நோக்கி நகர்கிறது யாஸ் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x
ஒடிசா நோக்கி நகர்கிறது யாஸ்" புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 

வங்க கடலில் உருவான "யாஸ்" புயல் தற்போது கிழக்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளதையடுத்து, ஒடிசாவுக்கு மஞ்சள் நிற புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த "யாஸ்" புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது,. இந்த புயலானது  வடமேற்கு நோக்கி நகர்ந்து  சென்று தீவிர புயலாக மாறும் எனவும், மேலும் வலுபெற்று அதிதீவிர புயலாக மாறவுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,.தொடர்ச்சியாக வடமேற்கு பகுதி நோக்கி நகரும்  "யாஸ்" புயல் ஒடிசாவின் பிரதீப் கடற்கரை மற்றும் சாஹர் தீவுக்கிடையே  மிகத்தீவிர புயலாக கரை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,. இதனைத்தொடர்ந்து ஒடிசாவுக்கு மஞ்சள் நிற புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்