ஸ்பூட்னிக் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிப்பு" - "ஆகஸ்ட்டில் உற்பத்தி தொடங்கும்"

இந்தியாவில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் டி.பி. வெங்கடேஷ் வர்மா அறிவித்துள்ளார்
ஸ்பூட்னிக் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிப்பு - ஆகஸ்ட்டில் உற்பத்தி தொடங்கும்
x
ஸ்பூட்னிக் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிப்பு" - "ஆகஸ்ட்டில் உற்பத்தி தொடங்கும்" 

இந்தியாவில்  ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் டி.பி. வெங்கடேஷ் வர்மா அறிவித்துள்ளார்.இந்தியாவில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்காக ரஷ்யா ஐந்து இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது,.இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தூதர் டி.பி. வெங்கடேஷ் வர்மா, இந்தியாவில்  ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் தயாரிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்,.அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் 85 கோடி டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்படும் என்றும்  உலகில் எங்கும் உற்பத்தி செய்யப்படும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியில்  65 முதல் 70 சதவீதம் இந்தியாவில் இருந்து வரும் என்றும் டி.பி. வெங்கடேஷ் வர்மா கூறியுள்ளார்,.இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு ஏற்கனவே 2 லட்சத்து 10 ஆயிரம்  டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் கிடைத்துள்ளது என்றும் மே மாத இறுதிக்குள், 30 லட்சம் டோஸ்கள் மொத்தமாக  கிடைக்கும்  எனவும் வெங்கடேஷ் வர்மா தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்