2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை... மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைப்பு

புனேவில் இருந்து 2 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.
x
2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை... மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைப்பு 

புனேவில் இருந்து 2 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.மத்திய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வந்து சேரவில்லை என்றும் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு தமிழக கோரிக்கை விடுத்திருந்தது,. இந்த நிலையில் புனேவில் இருந்து 2 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது,. 20 பாா்சல்களில் வந்த தடுப்பூசி மருந்துகளை தமிழக மக்கள் நல்வாழ்வு துறையினா் சென்னையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து சென்றனா்,.அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்