குஜராத்தில் புயல் பாதித்த பகுதிகள்... தனி விமானத்தில் சென்று பார்வையிட்ட பிரதமர்

டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
குஜராத்தில் புயல் பாதித்த பகுதிகள்... தனி விமானத்தில் சென்று பார்வையிட்ட பிரதமர் 

டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத்தில் டவ்தே புயல் கரையை கடந்தபோது,13 பேரை உயிர் பலி வாங்கியது.160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் ஆமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் 16 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. சுமார் 6 ஆயிரம் கிராமங்களில் 70 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 674 சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அகமதாபாத், வதோதரா, சூரத் உள்ளிட்ட நகரங்கள் புயலின்
கோரத்தாண்டவத்தில் சேதமடைந்து உள்ளன.இந்த நிலையில், குஜராத்தில் புயல் சேத பாதிப்புகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். உனா, டியு, ஜஃபராபாத், மஹுவா உள்ளிட்ட பகுதிகளை தனி விமானத்தில் சென்று பிரதமர் பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி,டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருவதாக, குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்