இஸ்ரேலில் உயிரிழந்த கேரள பெண் - டெல்லி கொண்டுவரப்படும் உடல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பலியான கேரள பெண் சவுமியாவின் உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று டெல்லி வருகிறது.
இஸ்ரேலில் உயிரிழந்த கேரள பெண் - டெல்லி கொண்டுவரப்படும் உடல்
x
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பலியான கேரள பெண் சவுமியாவின் உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று டெல்லி வருகிறது.

கேரளத்தின் இடுக்கி மாவட்டம் கீரத்தோடு பகுதியை  சேர்ந்த சவுமியா, இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இடியேயான மோதலில் சவுமியா உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் 10 வயது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் கேரளத்தில் வசிக்கின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன் கேரளா வந்து சென்ற சவுமியா, மீண்டும் இன்னும் சில மாதங்களில் கேரளா வருவதாக இருந்தார். ஆனால் எதிர்பாரத விதமாக உயிரிழந்த சவுமியாவின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஆவணங்கள் இஸ்ரேல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின் அங்கிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்கு செல்லப்படுகிறது. பின்னர் சவுமியாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்