ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம் - 12 பேர் கொண்ட சிறப்பு குழு நியமனம்

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வந்தது. இந்நிலையில், சில முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம் - 12 பேர் கொண்ட சிறப்பு குழு நியமனம்
x
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வந்தது. இந்நிலையில், சில முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் பேராசிரியர், இயக்குனர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட சிறப்புக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. 

தேவை ஏற்படும் போது, நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் மற்றும் முக்கிய அமைச்சகங்களின் செயலாளர்கள் அளவிலுள்ள அதிகாரிகளிடம் இருந்து, இந்த சிறப்புக் குழுவினர் உதவி பெற்றுக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அறிவியல் பூர்வமாகவும், மத்திய அரசு விதிமுறைகள் படியும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவைக்கேற்ப ஆக்சிஜன் சப்ளை கிடைப்பதை உறுதி செய்யுமாறு இந்தக் குழுவை கேட்டுக்கொண்ட உச்சநீதிமன்றம், 

தேவைப்படும் பட்சத்தில் எத்தனை துணைக் குழுக்களை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம் எனவும், அதிகாரம் வழங்கியுள்ளது. 

பொது சுகாதாரம், அவசர மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை, தேவைப்பட்டால் வெளியில் இருந்து பெறலாம் எனவும், 

தனியார் மருத்துவமனைகளும் சுகாதார அமைப்புகளும் இந்த சிறப்பு குழுவை உதவிக்காக அணுகலாம் எனவும் அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், 

மத்திய, மாநில அரசுகள் அனைத்துத் தகவல்களையும் முறையாக பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டது. 

Next Story

மேலும் செய்திகள்