கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து - அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல்

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு விரைந்து குணமளிக்கும் 2DG என்கிற மருந்துக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து - அவசர கால பயன்பாட்டுக்கு  ஒப்புதல்
x
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு விரைந்து குணமளிக்கும் 2DG என்கிற மருந்துக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படும் இன்மாஸ் ஆய்வகம் 2DG என்ற கொரோனாவுக்கு எதிரான மருந்தை கடந்த ஆண்டு கண்டுபிடித்தது. ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த மருந்தை அவசரக் கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்த மருந்தில் உள்ள மூலக்கூறுகள் விரைந்து குணமளிக்கும் எனவும் இதன் மூலம் நோயாளிகள் ஆக்சிஜன் உதவியை நாடி இருப்பது வெகுவாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி இருக்கும் நாட்களையும் இந்த மருந்து வெகுவாகக் குறைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்