கொரோனா பரவல் காரணமாக,ஜே.இ.இ.முதன்மை தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக,ஜே.இ.இ.முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
x
கொரோனா பரவல் காரணமாக,ஜே.இ.இ.முதன்மை தேர்வு  ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்களில் சேர, ஜே.இ.இ. என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2 கட்டமாக, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த தேர்வு நடந்தது. இதனையடுத்து, அடுத்த 3வது கட்டமாக ஏப்ரல் 27, 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது.கொரோனா பரவல் காரணமாக அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நான்காம் கட்டமாக வரும் 24 முதல் 28 வரை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வு தொடர்பாக 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. இந்த காலகட்டத்தை தேர்வுக்கு நன்கு தயாராக பயன்படுத்தி கொள்ளும்படி அந்த அமைப்பு மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்