ஆக்சிஜன் பற்றாக்குறை-மேலும் 2 பேர் பலி... மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

ஆக்சிஜன் பற்றாக்குறை-மேலும் 2 பேர் பலி... மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்
x
ஆக்சிஜன் பற்றாக்குறை-மேலும் 2 பேர் பலி... மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நேற்று இரவு மேலும் இரண்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்...கர்நாடக மாநிலத்தில் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது,. இதனால் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர்,. மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது,. நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து 24 நேரம் கூட முடியாத நிலையில், தலைநகரான பெங்களூருவில்  ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வர வேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் சரியான நேரத்தில் கிடைக்கப் பெறாததால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. நேற்று பிற்பகலில் வரவேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று அதிகாலை 5 மணிக்கு வந்ததால் சிகிச்சை பெற்று வந்த 45 நோயாளிகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்