கேரள சட்டமன்ற தேர்தல் - மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் பினராயி
கேரளாவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது இடதுசாரி முன்னணி. தொடர்ந்து 2 வதுமுறையாக ஆட்சியை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி எதிர்க்கட்சிகளை சலசலக்க வைத்தது. கேரள தங்க கடத்தல் வழக்கு, அதன் தொடர்ச்சியாக வந்த டாலர் கடத்தல், கருப்பு பண மோசடி, அன்னிய செலாவணி மோசடி, அரசு திட்டங்களில் முறைகேடு, ஊழல் என அடுக்கடுக்காக வழக்குகளை சந்தித்தது கேரள அரசு. எதிர்க்கட்சிகள் தங்க கடத்தல் வழக்கை உடும்பு பிடியாக பிடித்து தங்க அரசியல் சதுரங்க வேட்டையை தொடக்கின. கேரள முதல்வரின் முதன்மை செயலாளர் கைது, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பதவி விலகல், அவரது மகன் மயக்க மருந்து வழக்கில் கைது, அமைச்சர்களிடம் விசாரணை என எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான போராட்டங்களை கையில் எடுத்தன. ஆனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முறியடித்து உள்ளாட்சி தேர்தலில் அமோக இடங்களில் இடது ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றன. கேரள அரசியல் வரலாற்றில் ஆளும் இடது ஜனநாயக கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது இதுவே முதன்முறை. தங்க கடத்தல் துவங்கி ஊழல் வரையிலான குற்றச்சாட்டுகள் மக்களிடம் எடுபடவில்லை என்பதால் சபரிமலை விவகாரத்தை எதிர்கட்சிகள், முன்னிறுத்தின. ஆனால், சபரிமலை விவகாரம் இருந்த போதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கிடைத்தது என்பது இடது சாரிகளின் கருத்து...
கடந்த 1948 ஆம் ஆண்டு கேரளா சந்தித்த முதல் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. பட்டம் தாணுபிள்ளை முதல்வரானார். கடந்த 1969 தேர்தலில் முதன்முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சியை பிடித்தனர். ஈ.எம்,.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அதற்கடுத்து தற்போது இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி வரை ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை கொடுத்து வந்தார்கள் கேரள வாக்காளர்கள். ஆனால், இப்போது... அந்த சரித்திரம் மாறியிருக்கிறது.
Next Story