கேரளாவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது இடதுசாரி முன்னணி
கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி வலுவான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
கேரளத்தின் 140 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இடதுசாரி முன்னணி கூட்டணி சுமார் 90 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சியமைப்பதற்கு 71 தொகுதிகளே தேவை என்ற நிலையில் வலுவான முன்னிலையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக 3 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. கேரளாவில் பினராயி விஜயனே மீண்டும் முதலமைச்சராக தேர்வாவதற்கான வாய்ப்புகள் இருப்பததாக கூறப்படுகிறது. மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகம் இருக்கும் நிலையில், அதற்கு ஏற்றாற் போல புதிய அரசு உடனடியாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் திங்கட்கிழமை பதவியேற்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Next Story