மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். வெற்றி - தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
8 கட்டங்களாக நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மைக்கு 148 இடங்களே தேவை என்ற நிலையில் 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மிகப்பெரும் வெற்றியாக இது கருதப்பட்டாலும் இதற்காக பெரிய விலைகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜிக்கு, நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி கடும் போட்டி அளித்தார். இவர் மம்தாவுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்து பாஜகவுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கடந்த முறை 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக இம்முறை கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 80 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரசின் வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story