கேரளா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு - அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன

கேரளாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மொரதாபாத் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கேரளா மற்றும்  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு - அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன
x
கேரளா மற்றும்  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு - அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன 

கேரளாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வரும் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. முக்கியத் தேவைகள் இருந்தால் மட்டுமே மக்கள் வெளியே வரவேன்டும் என்று அறிவிப்பு இருப்பதால், பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கினர். 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மொரதாபாத் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. நாளுக்கு நாள் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பரவலாக ஊரடங்கும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் ஊரடங்கை முன்னிட்டு, அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படிருந்தன. முக்கியத் தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்தனர். 



Next Story

மேலும் செய்திகள்