மே 4 முதல் 9 வரை கடும் கட்டுப்பாடுகள் - கேரள முதல்வர் அறிவிப்பு

மே 4 முதல் 9 வரை கடும் கட்டுப்பாடுகள் - கேரள முதல்வர் அறிவிப்பு
மே 4 முதல் 9 வரை கடும் கட்டுப்பாடுகள் - கேரள முதல்வர் அறிவிப்பு
x
மே 4 முதல் 9 வரை கடும் கட்டுப்பாடுகள் - கேரள முதல்வர் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 4 முதல் 9ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரளாவில் ஒரே நாளில் மேலும் 38 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, தேர்தல் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொண்டார். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய, அனைத்து விதமான பணிகளும் நடந்து வருவதாக குறிப்பிட்ட பினராயி விஜயன், மாநிலத்தில் புதிய ஆக்சிஜன் ஆலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக, கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் மே 4  முதல் 9ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், இதுதொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவித்தார்.
 
Next Story

மேலும் செய்திகள்