உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா காலை 11 மணிக்கு பதவியேற்றார்.

உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா காலை 11 மணிக்கு பதவியேற்றார்.
x
உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.  ரமணா காலை 11 மணிக்கு பதவியேற்றார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.போப்டே நேற்றுடன் ஓய்வு பெற்றார்.இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பதவியேற்றுக் கொண்டார்.என்.வி.ரமணா ஆந்திர பிரதேசம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாபுரம் என்ற கிராமத்தில் 1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ம் தேதி பிறந்தார்.ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார்.தொடர்ந்து பல தீர்ப்பாயங்கள், ஆந்திர உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்  என பல தளங்களில் முக்கியமான பணியாற்றினார்.மேலும், அரசியல் சாசனம், குற்றவியல் தொழிலாளர் நலச் சட்டம் மற்றும் தேர்தல் தொடர்பான வழக்குகளைக் கையாண்டுள்ளார்.குறிப்பாக கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடங்கி பல்வேறு வழக்குகளில் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டவர் என்.வி.ரமணா ஆவார்.கடந்த 2000ம் ஆண்டு, ஜூன் 27ம் தேதி, ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.பிறகு, ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற இவர், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.கடந்த 2014ம் ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், இன்று உச்ச நீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.என்.வி.ரமணா 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்