கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்திற்கு வந்த கூடுதல் தடுப்பு மருந்துகள்

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்திற்கு வந்த கூடுதல் தடுப்பு மருந்துகள்
x
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்திற்கு வந்த கூடுதல் தடுப்பு மருந்துகள்

தமிழகத்திற்கு கூடுதலாக 4 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் வந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தலா 2 லட்சம் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இந்த தடுப்பு மருந்துகள் பிரித்து, மாவட்ட சுகாதார மையங்களுக்கு விரைவில் அனுப்பப்படும் என குறிப்பிட்டுள்ளார்.மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 67 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பு மருந்துகள் பெறப்பட்டுள்ளன.கோவிஷீல்டு 57 லட்சத்து 3 ஆயிரத்து 590 டோஸ்களும், கோவாக்சின் 10 லட்சத்து 82 ஆயிரத்து 130 டோஸ்களும் தமிழகத்திற்கு வந்துள்ளன.இதில் 51 புள்ளி 3 லட்சம் டோஸ் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.இன்னும் 12 புள்ளி 5 லட்சத்திற்கு அதிகமான டோஸ் கையிருப்பில் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்