மகாராஷ்டிரா ஆக்சிஜன் டேங்கரில் கசிவு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியீடு
பதிவு : ஏப்ரல் 23, 2021, 03:14 PM
நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொரோனா நோயாளிகள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் உள்ள  நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொரோனா நோயாளிகள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக நடந்த இந்த துயர சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. ஆக்சிஜன் டேங்கரில் இருந்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சென்று கொண்டிருந்த போது, டேங்கரில் ஏற்பட்ட கசிவால் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் பலர் இறக்க நேரிட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிற செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதே தீர்வு; பிரியங்கா காந்தி யோசனை

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, தடுப்பூசி நிறுவனங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் வரை காலதாமதம் செய்து, இந்தியாவுக்கான முதல் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தை போட்டது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

31 views

கங்கையில் மிதக்கும் சடலங்கள்; கொரோனாவால் உயிரிழந்தவர்காளா?

கொரோனா 2-வது அலையில் நாடு தத்தளிக்கும் சூழலில், மற்றொரு துயரமாக உத்தரபிரதேசத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் சடலம் கங்கையில் விடப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

23 views

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து; மத்திய அரசின் டி.ஆர்.டி.ஒ நிறுவனம் சாதனை

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து மத்திய அரசின் டி.ஆர்..டி.ஒ நிறுவனம் சாதனை.ஆக்சிஜன் தேவையை வெகுவாக குறைக்கும் மருந்து.

154 views

கொரோனாவில் சாணம் இருந்து பாதுகாக்காது; மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து பாதுகாக்காது. சாணத்தை உடலில் பூசிக்கொள்வது ஆபத்தானது. மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரிக்கை.

100 views

அதிகரித்து வரும் கொரோனா தொற்று; எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம்? - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில், 83 சதவீதம் பேர் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

322 views

2-18 வயதினருக்கான கோவாக்சின் தடுப்பூசி; 2,3 ஆம் கட்ட சோதனைக்கு அனுமதி கோரி மனு

2 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான கோவாக்சின் தடுப்பூசி, 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.