மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்
மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்
x
மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன் 

வலையில் சிக்கிய தன்னை பாதுகாப்பாக மீட்ட நபரிடம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாசம் காட்டும் மீன், மனிதர்களுக்கெல்லாம் உண்மையான அன்பை உணர வைக்கிறது.புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வருபவர் அரவிந்த். இவர் சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து ஆழ்கடலுக்கு சென்று வருவது வழக்கம். அதுபோல் 2010 ஆம் ஆண்டு கடலுக்கு அரவிந்த் சென்ற போது வலையில் சிக்கியிருந்தது ஃபன்னி வகையை சேர்ந்த மீன். அப்போது அதிலிருந்து மீனை மீட்ட அரவிந்தை நன்றியோடு பார்த்து விடை கொடுத்த மீன் கிட்டத்தட்ட 10 வருடங்களை கடந்தும் அதே பாசத்தை காட்டி வருகிறது. அரவிந்த் கடலுக்கு செல்லும் போதெல்லாம் அவரை தனியாக அடையாளம் கண்டு கொள்ளும் அந்த மீன், அவர் பாசமாக வருடிக் கொடுப்பதை ஆமோதித்துக் கொள்கிறது. ஆனால் மற்றவர்கள் யாரையும் நெருங்க விடாத இந்த மீனானது, நன்றிக்கும் அன்புக்கும் உதாரணமாக திகழ்கிறது. மீனுடன் அரவிந்த் கொஞ்சி மகிழும் வீடியோ காட்சிகளே அதற்கு சாட்சி...

Next Story

மேலும் செய்திகள்