ரிசர்வ் வங்கி முன்னெடுத்துள்ள கடன் பத்திர திட்டம்.. பலனளிக்காது என்கிறது மூடிஸ் ஆய்வு நிறுவனம்

ரிசர்வ் வங்கி முன்னெடுத்துள்ள கடன் பத்திர திட்டம்.. பலனளிக்காது என்கிறது மூடிஸ் ஆய்வு நிறுவனம்
ரிசர்வ் வங்கி முன்னெடுத்துள்ள கடன் பத்திர  திட்டம்.. பலனளிக்காது என்கிறது மூடிஸ் ஆய்வு நிறுவனம்
x
வளரும் நாடுகளில், இந்தியாவின் கடன் சுமை மிக அதிமாக உள்ளதாக மூடிஸ் ஆய்வு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வளரும் நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளில், இந்தியாவின் கடன் சுமை மிக அதிகமாக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இதனால், இந்திய ரிசர்வ் வங்கி முன்னெடுத்துள்ள கடன் பத்திரங்களை வாங்கி, பண ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் திட்டம், போதுமான பலனை தராது என்றும் அது தெரிவித்துள்ளது. நாட்டின் கடன் சுமை, நிகர உள்நாட்டு உற்பத்தி அளவில் 88.4 சதவீதமாக உள்ளது. மத்திய அரசின் ஆண்டு வருவாயில் 28.2 சதவீதம், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டி செலுத்த ஒதுக்கப்படுகிறது. எனவே மேலும் அதிக அளவில் கடன் வாங்கும் திறன் இந்திய அரசுக்கு இல்லை என்று மூடீஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்