12/04/2021 - 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி... ஐதராபாத் அணி போராடி தோல்வி | விறுவிறு செய்திகள்

12/04/2021 - 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி... ஐதராபாத் அணி போராடி தோல்வி | விறுவிறு செய்திகள்
12/04/2021 - 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி...  ஐதராபாத் அணி போராடி தோல்வி | விறுவிறு செய்திகள்
x
12/04/2021 - 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி...  ஐதராபாத் அணி போராடி தோல்வி | விறுவிறு செய்திகள் 

 மேற்கு வங்க மாநிலம் நாதியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரமாண்ட பேரணியை மேற்கொண்டார். மாநிலத்தில் 17 ஆம் தேதி 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ள அமித்ஷா, சந்திபூரில் பாஜக பேரணியில் கலந்துக் கொண்டார். இருபுறமும் திரளாக பங்கேற்ற தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மே 2-ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், பசிர்ஹட் தக்‌ஷின் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறினார். மேலும், தான் ராஜினாமா செய்ய வேண்டுமென மம்தா அடிக்கடி கூறுவதாகவும், மக்கள் கூறினால் ராஜினாமா செய்வதாகவும் அமித்ஷா கூறினார். 200 தொகுதிகளில் பாஜகவை வெற்றிபெற செய்து மம்தாவிற்கு பிரியாவிடை அளிக்க வேண்டுமெனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 4ஆம் கட்ட வாக்குப் பதிவின் மூலம் தோல்வி அடைந்துவிடுவோம் என தெரிந்து விட்டதால், பாஜக துப்பாக்கியை பயன்படுத்துகிறது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.  கூச் பெஹாரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டது குறித்து, ஜல்பைகுரி பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது, தான் வங்காள புலி எனவும், தன்னை கூச் பெஹாருக்கு செல்ல விடவில்லை எனவும் மம்தா கூறினார். இந்த துப்பாக்கி குண்டுகளுக்கு பதிலாக வாக்குகளின் வடிவில் நாங்கள் பழி தீர்ப்போம் என்றும் அவர் கூறினார்.
 
கொரோனா பரவல் காரணமாக  சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்துடன் மத்திய அரசு விளையாட விரும்புகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள  ராகுல் காந்தி, மத்திய அரசு முடிவுகளை எடுப்பதற்கு முன் அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் 

பாகிஸ்தானில் நடைபெறும் பைசாக்கி சீக்கிய திருவிழாவில் பங்கேற்பதற்காக 437 இந்தியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலங்களில் ஆண்டுதோறும் பைசாக்கி திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 437 சீக்கிய யாத்ரீகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நன்கானா சாஹிப் உட்பட அனைத்து சீக்கிய கோயில்களுக்கும் செல்ல அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இன்று புறப்படும் சீக்கிய யாத்ரீகர்கள், 22-ஆம் தேதி நாடு திரும்புகின்றனர். 

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 80 ரன்களும், திரிபாதி 53 ரன்கள் சேர்த்தனர். பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஐபிஎல் போட்டியில் மந்தமாக விளையாடும் பேட்ஸ்மேன்களால் சம்பந்தப்பட்ட அணிக்கு பின்னடைவு ஏற்படுவதாக சேவாக் விமர்சித்துள்ளார். நேற்றைய போட்டியில் மணிஷ் பாண்டே கடைசி வரை களத்தில் இருந்தும் ஐதராபாத் அணியால் வெற்றி பெற முடியவில்லை. போட்டி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த சேவாக், சிலரது மந்தமான ஆட்டத்தால், அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை எனவும், இதனால் கடந்த சீசனில் சில அணிகள் தடுமாறியதாகவும் விமர்சித்துள்ளார்.
 

ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதன்முறையாக சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் அணியில் பட்லர், ஸ்டோக்ஸ், மோரீஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியில் அகர்வால், பூரான், கெய்ல், ஷமி உள்ளிட்ட வீரர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது..
 


Next Story

மேலும் செய்திகள்