சில மாநிலங்களின் பொருளாதார உற்பத்தி ... எஸ்.பி.ஐ. வங்கி குழு அறிக்கை வெளியீடு

சில மாநிலங்களின் பட்ஜெட் அறிக்கைகளில் குறிப்பிடப்படும் மாநில பொருளாதார உற்பத்தியின் அளவுகள் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளதாக, எஸ்.பி.ஐ வங்கியின் பொருளியலாளர்கள் குழு வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது.
சில மாநிலங்களின் பொருளாதார உற்பத்தி ... எஸ்.பி.ஐ. வங்கி குழு அறிக்கை வெளியீடு
x
சில மாநிலங்களின்  பட்ஜெட் அறிக்கைகளில் குறிப்பிடப்படும் மாநில பொருளாதார உற்பத்தியின் அளவுகள் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளதாக, எஸ்.பி.ஐ வங்கியின் பொருளியலாளர்கள் குழு வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது. இவை அனைத்தையும் கூட்டினால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-21இல் 3 சதவீதமாக உள்ளதாக காட்டுவதாகவும், இது மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள கணிப்பிற்கு முரணாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் மாநில உற்பத்தி அளவு பற்றிய கணிப்புகள் மிகைப்படுத்தி  காட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இம்மாநிலங்களின் பொருளாதார உற்பத்தி பற்றிய கணிப்புகளுக்கும், அம்மாநிலங்களில்
வசூலிக்கப்படும் வரிகளின் அளவுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. மாநில ஜி.எஸ்.டி.பி பற்றிய கணிப்புகள் மறு சீராய்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்