சூடுபிடிக்கும் கேரள தேர்தல் களம்... வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மார்க்சிஸ்ட்

கேரளாவில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 83 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
சூடுபிடிக்கும் கேரள தேர்தல் களம்... வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மார்க்சிஸ்ட்
x
கேரளாவில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 83 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் தலைமை வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 85 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலையில், 83 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மாநில செயலாளர் விஜயராகவன் வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் சைலஜா, மேழ்சி குட்டி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 74  பேர் இடம்பெற்று உள்ளனர். 9 பேர் அக்கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட உள்ளனர். பட்டியலில் 12 பெண் வேட்பாளர்களும் இடம்பெற்று உள்ளனர். அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்