தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா - புதுச்சேரியில் கட்சியினருடன் கலந்தாய்வு

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே நாளில் தேர்தல் நடத்துமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் வலியுறுத்தப்பட்டது.
x
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே நாளில் தேர்தல் நடத்துமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்டோர், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவை பதவி காலம் ஜூன் 8ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அங்குள்ள 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. ஆலோசனை கூட்டத்தில், 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குரிமை குறித்து தெரிவித்த புகாருக்கு, அவர்களுக்கு வாக்குரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுனில் அரோரா கூறினார்.  இதனிடையே, தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துமாறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.   


Next Story

மேலும் செய்திகள்