"சுற்றுச் சூழலுக்கு மாசு இல்லாத எரிவாயு - மின்சாரம்" - பிரதமர் மோடி

சுற்றுச் சூழலுக்கு மாசு இல்லாத எரிவாயு மற்றும் மின்சாரத்தை பெற வேண்டும் என்பதற்காக அரசு முழு உறுதியுடன் பணியாற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுற்றுச் சூழலுக்கு மாசு இல்லாத எரிவாயு - மின்சாரம் - பிரதமர் மோடி
x
கொச்சி, மங்களூரு இடையேயான எரிவாயுக் குழாய் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, எந்த இலக்கும் கடினமானது அல்ல என்பதற்கு இந்தத் திட்டம் உதாரணமாக திகழ்வதாக குறிப்பிட்டார்.இந்தியாவின் தற்சார்பு பாரத திட்டத்திற்கு எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என குறிப்பிட்ட பிரதமர், எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் மீது இந்தியா அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஒரே நாடு ஒரே எரிவாயு தொகுப்புக்காக ஏராளமான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது இதனை செயல்படுத்துவதில் ஏராளமான பிரச்சினைகள் இருந்ததாகவும், ஆனால் பணியாளர்கள், பொறியாளர்கள், இரு மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் தற்போது இந்த திட்டம் செயல்படுத்தி முடிக்க பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.இந்த திட்டம் மூலம் இரு மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சுயதொழில் முனைவோரின் செலவுகள் கணிசமாக குறையும் என குறிப்பிட்டார்.இதன் மூலம் இரு மாநிலங்களிலும் உள்ள சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறையும் என குறிப்பிட்ட பிரதமர் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் குறைந்த விலையில் போதுமான அளவில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத எரிவாயு மற்றும் மின்சாரத்தை பெற பெற வேண்டும் எனவும், அதற்காக தமது அரசு தொடர்ந்து பணியாற்ற உறுதி பூண்டு உள்ளதாக தெரிவித்தார்.





Next Story

மேலும் செய்திகள்