கன்னியாஸ்திரி அபயா வழக்கு - பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கேரளாவில் 1992ல் கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
கன்னியாஸ்திரி அபயா வழக்கு - பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x
கேரளா மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த 19 வயதான கன்னியாஸ்திரி அபயா 1992ல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரின் மரணம் தற்கொலை என கூறப்பட்ட நிலையில் இது கொலை தான் அழுத்தமாக கூறப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டதை தொடர்ந்து தான் நடந்தது கொலை என உறுதியானது. இந்த வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கொலையாளிகள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்த அபயா, கோடாரியால் அடித்துக் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதும் உறுதியானது. இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதனிடையே தாமஸ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஆறரை லட்ச ரூபாய் அபராதமும், கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்