'சூரரைப் போற்று' படத்தை கொண்டாடும் ரசிகர்கள் - ஏர் டெக்கான் விமான நிறுவனர் கோபிநாத்தின் நிஜக்கதை

சூரரைப் போற்று படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கதையின் நிஜ நாயகனான ஜி.ஆர். கோபிநாத்தை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
சூரரைப் போற்று படத்தை கொண்டாடும் ரசிகர்கள் - ஏர் டெக்கான் விமான நிறுவனர் கோபிநாத்தின் நிஜக்கதை
x
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தீபாவளி வரவாக ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் நிஜ நாயகனான ஜி.ஆர்.கோபிநாத் குறித்த தேடலும் அதிகமாகி இருக்கிறது. 


1951ல் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த கோபிநாத், இந்திய ராணுவத்தில் சேர்ந்து 8 வருடங்கள் பணியாற்றினார். கேப்டனாக பதவி உயர்வு பெற்ற அவர், தன் 28 வது வயதில் ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 

ஆனாலும் வான் ஊர்திகள் மீதான அலாதி பிரியம் கோபிநாத் 1997ல் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டார். 

இந்த சூழலில் தான் 2003ல் ஏர் டெக்கான் என்ற ஒரு விமான நிறுவத்தை துவக்கினார் கோபிநாத். 500 ரூபாய் கட்டணத்தில் விமான சேவையை வழங்கினார். இதன் காரணமாக போட்டி நிறுவனங்களும் தங்கள் சேவை கட்டணத்தை குறைத்தன. இந்திய விமான சேவைத்துறையில் இது ஒரு புரட்சியாகவே பேசப்பட்டது. ஆனால் இதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 

தொடர் இழப்பை எதிர்கொண்டவர், பின்னர் ஏர் டெக்கான் நிறுவனத்தை விஜய் மல்லையாவிடம் விற்றுவிட்டு துறையை விட்டு வெளியேறினார். பின்னர் டெக்கான் 360 என்ற சரக்கு விமான போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கினார்.

தற்போது மத்திய அரசின் உதான் விமான சேவை திட்டத்தின் கீழ் சிறிய ரக விமானங்களை சிறு நகரங்களுக்கு இடையே இயக்கி வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்