இந்தியா - ஆசியான் நாடுகள் உச்சி மாநாடு : வர்த்தம், கடல்வழி, டிஜிட்டல் உறவை குறிப்பிட்டு மோடி பேச்சு

அனைத்து துறைகளிலும் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆசியான் நாடுகள் உச்சி மாநாடு : வர்த்தம், கடல்வழி, டிஜிட்டல் உறவை குறிப்பிட்டு மோடி பேச்சு
x
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு, 'ஆசியான்' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆசியான் அமைப்பு மற்றும் இந்தியா இடையிலான உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமர் நுயன் சுவான் புக்கும் கூட்டாக தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வர்த்தம், டிஜிட்ட​ல், கடல்வழி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியான் மற்றும் இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என கூறினார். இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையிலான உறவு பாரம்பரியமிக்கது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்