ஒரு லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி. வரிவசூல் - நிர்மலா சீதாராமன் தகவல்

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 560 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்றும், அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டி உள்ளதாகவும் நிதி அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி. வரிவசூல் - நிர்மலா சீதாராமன் தகவல்
x
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 13 சதவீதம் அதிகரித்து உள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளார். 

இந்த காலகட்டத்தில் 35.37 பில்லியன் அமெரிக்க  டாலர்கள் அந்நிய முதலீடாக வரப்பெற்று உள்ளதாகவும் அவர் கூறினார். 

நாட்டின் பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்கு திரும்பும் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே கணித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

அக்டோபர் மாதத்தில் எரிபொருள் தேவை12 சதவீதம் அதிகரித்து உள்ளது,  பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருப்பதற்கான அறிகுறி என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சுயசார்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பல புதிய அறிவிப்புகள் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளன என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஆயிரத்து 373 கோடி ரூபாய்  கடன் உதவி சாலையோர வியாபாரிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்