இந்திய மத சமூகங்கள் இடையே பிளவை உருவாக்க முயற்சி

இந்தியாவில் உள்ள மத சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது என இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.
இந்திய மத சமூகங்கள் இடையே பிளவை உருவாக்க முயற்சி
x
இந்தியாவில் உள்ள  மத சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது என இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. சமகாலத்திய இனவெறி, இனவெறி, தொடர்புடைய சகிப்பின்மை குறித்த விவாதத்தில், ஐ.நா.வுக்கான முதல் நிலை செயலாளர் ஆஷிஷ் சர்மா தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக, இந்தியா ஒரு ஜனநாயக கட்டமைப்பின் கீழ் அனைத்து சமூகங்களும் இணக்கமாக வாழும் பன்மைத்துவம் மற்றும் சகவாழ்வு பாரம்பரியத்தை கொண்டிருப்பதால், பாகிஸ்தானில் ஆத்திரமூட்டல் பேச்சு, இந்தியர்கள் காதில் விழவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்த நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆஷிஷ் சர்மா குற்றம்சாட்டி உள்ளார். பாகிஸ்தானில் சகவாழ்வை கடைப்பிடிக்கவும், அனைத்து குறுங்குழு வாத வன்முறைகள், பாகுபாடு மற்றும் சகிப்புத் தன்மையின்மையை, தங்கள் சொந்த மக்களுக்கு எதிராகத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்த ஆஷிஷ் சர்மா பாகிஸ்தான் பிரதிநிதி கூறிய கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்