லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, மாலை 4:45 மணிக்கு காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
x
'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, மாலை 4:45 மணிக்கு காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார். நாட்டில் ஆண்டுதோறும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, மத்திய புலனாய்வுப் பிரிவு இந்த  மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் அமைப்புகளின் கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். இதுதவிர,  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்